இந்த சிந்தனை எழுதப்பட்டது 2019 மே மாதம் 7 ஆம் திகதி:
எனக்கு நினைவிருக்கிறது சரித்திரம் படிக்கும் போது சிலுவை யுத்தம் பற்றிப் படித்தது. அத்துடன் ஏதோ ஒரு யுத்தத்தின் போது வாட்களில் பன்றியின் கொழுப்புப் பூசப்பட்டுள்ளது என்று ஒரு வதந்தி பரவி அதன் மூலம் இஸ்லாமியர்கள் கொதித்தெழுந்து அதனால் ஒரு கலவரம் மூண்டதென்றும் படித்த ஞாபகம். இப்போ இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமொன்று பல இடங்களிற் குண்டு வைத்து அங்கு ஒரே பதட்டமான நிலைமையாக உள்ளது. அது தான் என்னை சிந்திக்கத் தூண்டியது. அத்துடன் நான் மற்றைய மதங்களைப் பொறுத்தவரை என்னை ஒரு பெருந்தன்மையானவளாக இவ்வளவு நாட்களும் எண்ணியிருந்தேன். ஆனால் ஓரிரு நாட்களின் முன்னர் தான் நானும் கூட ஏனைய மதங்களைப் பொறுத்த வரை ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்திருப்பதை அறிந்து வெட்கினேன். அப்போ தான் உண்மையில் தீவிரமாக இவ்விஷயத்தைப் பற்றிச் சிந்தித்தேன். எனது எண்ணத்தைச் சொல்கிறேன்.
அதாவது இறைவனிடமிருந்து நாம் பிரிந்து இப்பூவுலகில் பிறப்பெடுக்கும் போது மீண்டும் இறைவனிடம் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையுடன் தானே வருகிறோம். இங்கு வந்து வளர்ந்து எமக்கு அறிவு வருகையில் எமது பெற்றாரோ அல்லது ஆசிரியர்களோ எமக்கு மதங்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்போ நான் நினைக்கிறேன் இறைவனை மீண்டும் நாம் சென்றடைய வேண்டும் என்ற எமது உள்ளுணர்வின் நோக்கத்தால், 'ஓ இந்த வழியைப் பின் பற்றினால் நமது இறைவனை நாம் அடைய முடியும்' என எமது உள் மனம் நம்பத்தொடங்குகிறது. எமது பெற்றோரையே நாம் உலக விடயங்களுக்கும் நம்புவதால் இவ்விஷயத்திலும் அவர்களின் வழி காட்டலையே நம்பி அந்த வழிகளைப் பின்பற்றத் தொடங்குவோம். அப்போ ஒரு கட்டத்தில் வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவரை நாம் சந்திக்க வேண்டி வருகையில் எமது ஆத்மா அந்த வழி சரியா அல்லது எமது இந்த வழி சரியா என ஒரு கணம் தடுமாறும். அப்போ எமது வழிகாட்டிகளாக நாம் நினைப்பவர்கள் எமது வழி தான் சரியென எம்மை நம்பச் செய்வார்கள். என்றாலும் வேறு மதத்தைச் சேர்ந்த சிலர் தமது வழியே சரியென எம்மை மனம் மாற்ற முயற்சிக்கையில் சிலர் அதில் ஈடுபட்டு அவ்வழியைப் பின் பற்றத் தொடங்கலாம். மாறாதவர்கள் இந்த மதத்தில் நம்பிக்கை வைத்து அதன் வழியில் நடக்கலாம். அப்போ வேறு மதத்தவர்கள் தங்கள் மதத்தைப் பிரசாரம் செய்கையில் எமது வழி தான் சரியென எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்குக் கோவம் வரலாம். இதனாற் தான் உலகில் இவ்வளவு மதக்கலவரங்கள் உண்டாகிறது என நினைக்கிறேன்.
எனக்கு இப்போ நினைவு வருகிறது நான் இரண்டாம், மூன்றாம் அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் போது என நினைக்கிறேன், எனது சிறிய வயது நண்பி போன்ற ஒரு பெண் எனக்கு எமது வகுப்பிலே இருந்த வேற்று மதத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று பெண்களைக் காட்டி அவர்கள் எங்கள் சமயமல்ல மற்றைய சமயம் என்று பிரித்துக் காட்டியது. அப்போ நான் நினைத்தேன் ஓ அவர்கள் எங்களைப் போன்றவர்கள் அல்ல என. அப்போது தான் என் மனதில் வேறுபாடு விதைக்கப்பட்டது. எனக்குச் சொன்ன அச்சிறுமிக்கு அவளின் பெற்றார் அல்லது மூத்த சகோதரர்கள் யாராவது சொல்லியிருக்கலாம்.
இந்த மதக்கலவரங்களோ அன்றி மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகளோ இன்று நேற்றுத் தொடங்கவில்லையே. அவை காலகாலத்துக்கும் நடைபெற்றுக் கொண்டு தானே இருக்கின்றன. ஒவ்வொரு மதத்திற்கும் அந்த அந்த மதத்திற்குரிய மதத்தலைவர்களோ வழிகாட்டிகளோ குருமார்களோ இருப்பார்கள் தானே. பெரும் பாலும் அவர்களின் வாழ்க்கையே அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் அளிக்கும் பணமோ பொருளோ அவற்றில் தான் தங்கியுள்ளது. அப்போ அவர்கள் அம்மதத்தைப் பின் பற்றுபவர்களை இழக்க எந்த நேரத்திலும் விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் தங்கள் வழி தான் சரியென்று எந்த நேரமும் பின் பற்றுபவர்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டே தான் இருக்க வேண்டும். தங்கள் வழி தான் சரியென்று வலியுறுத்துகையில் மற்றைய மதங்கள் சரியில்லையென்பது சொல்லாமலே சொல்லப்படுகிறது. படிப்படியாக மதத்தின் மீது உள்ள ஈடுபாடு மதவெறியாக மாற்றப்படுகிறது.

No comments:
Post a Comment